நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2021 இதழ் சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி பாறையில் தவம் செய்ததைக் குறிக்கும் வண்ணம் புகழ் பெற்ற ஓவியர் எஸ்.எம். பண்டிட் வரைந்த வண்ணப் படத்தை அட்டைப் படத்தில் தாங்கி வருகிறது. புண்ணிய பூமி பாரதத்தைப் பேரற்றி விவேகானந்தர் கூறிய வாக்கியங்கள் இந்த மாத மந்திரமாக வெளி வருகின்றன. டிசம்பர் 25, 26, 27 முதல் ஜனவரி 12 வரை சமர்த்த பாரதப் பருவம் தேசம் முழுவதும் கேந்திரக் கிளைகளால் கெரண்டாடப்படும். ஜனவரி - 1 ஸ்ரீ ராமகிருஷ்ணர் பக்தர்களுக்கு அருளிய கல்பதரு நாள் ஆகும். ஜனவரி 12 - சுவாமி விவேகானந்தரின் ஜன்ம தினம் ஆகும். ஜனவரி 12 முதல் 19 வரை தேசீய இளைஞர் வாரம் ஆகும். ஜனவரி - 14 பெரங்கல் திருவிழா ஆகும். வாசக நேயர்களுக்கு வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும். இவ்விதழில் திரைலிங்க சுவாமியின் வாழ்க்கை வரலாறு, தாய் வயிற்றுக் கல்வி பேரன்றவை உங்கள் கவனத்திற்குரியவை.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருக் பிரார்த்திக்கிறேரம்.