விவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது.
நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய
ஆண்டறிக்கையாகும் இது.
சகோதரி நிவேதிதையின் 150-ம் ஆண்டு விழாவை ஒட்டி இவ்விதழில் அட்டையில் அவரது
உருவப்படமும் தலையங்கமாக கேந்திரத் துணைத்தலைவி மா. நிவேதிதா ரகுநாத் பிடே
சகோதரி நிவேதிதை பற்றி எழுதிய கட்டுரையும் வெளியாகின்றன. இம்மாத மந்திரமாக
ஓம்காரம் பற்றிய ஹிந்தி பஜனை ஒன்றும் அதன் தமிழாக்கமும் வெளியாகின்றன.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்.