அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட்டையில் அவர் படம் வெளியாகிறது. நல்லகுடும்பம் ஒரு பல்கலைக்கழகம் ஆசிரியர் கட்டுரைப் போட்டிப் பரிசுக் கட்டுரை ராமானுஜர் ஆகிய தொடர் கட்டுரைகள் நிறைவு பெறுகின்றன. இவை வாசகர்களின் கவனத்திற்குரியவை. டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரையிலான சமர்த்தப் பாரதப் பருவம் ஜனவரி – 1 கல்பதரு நாள் ஜனவரி – 12 சுவாமி விவேகானந்தர் ஜயந்தி மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இவை மிகுந்த புனிதத் தன்மை வாய்ந்தவை. கேந்திரக் கிளைகள் இந்நாட்களை பயபக்தியுடன் கொண்டாடும். வாசக அன்பர்கள் பங்கேற்க அழைக்கிறோம். வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.