Friday 1 October 2021


 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2021 இதழ் ஸ்ரீமத் சுவாமி மதுரானந்தாஜி அவர்களின் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. அவருடைய நூற்றாண்டு விழாவை ஒட்டி அவருடைய வாழ்க்கை வரலாறும், புகைப்படங்களும் அவர் எழுதிய பாடல்களும் வெளியாகின்றன. பிரணவம் எனும் ஓம்காரம் பகுதியில் சுவாமி சிவானந்தர் அவர்கள் மாண்டூக்கிய உபநிஷத உரையில் பிரணவ ரகசியம் ஸ்ரீ ராம கீதா ஆகிய நூல்களின் கருத்துக்களை உள்ளடக்கி எழுதிய தெரடர் ஆரம்பம் ஆகிறது. ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஆச்சாரியராகப் புகழ் பெற்ற வேதாந்த தேசிகரின் பாதுகா ஸஹஸ்ரம் எனும் நூலில் இருந்து பிரணவப் பகுதிகள் வெளியாகின்றன. ஸ்ரீராமகிருஷ்ணரின் கல்வி அறிவு, திருநீற்றின் மகிமை, ஸ்ரீ கிருஷ்ணரின் கல்வி அறிவு பற்றிய பகுதிகள் நசிகேதமன்றத்தில் வெளியாகின்றன. பிரம்ம ஞானியான ஸ்ரீ பி.ஆர். ராஜம் ஐயரின் சில கதைகள் இவ்விதழில் இடம் பெறுகின்றன. எட்வர்டு கேரல்டுஸ்மித்தின் நிறைவான பன்முக வளர்ச்சிக் கட்டுரை வெளிநாட்டு நிதி உதவி வளரும் நாடுகளுக்கு எத்தனை பிரச்சினைகளை உண்டாக்குகிறது என்பதை விளக்குகிறது. மனுநீதிச் சேரழர் கதை நம் மன்னர்களின் நியாய உணர்வை, அற உணர்வை எடுத்துக் காட்டுகிறது. இவ்விதழில் அத்தெரடர் நிறைவு பெறுகிறது. செப்டம்பர் - 11 சுவாமி விவேகானந்தர் சிக்காகேரவில் செரற்பெரழிவு ஆற்றிய உலக சகேரதரத்துவ தினம் கேந்திரக் கிளைகளில் கெரண்டாடப்படும். அருகில் இருக்கும் கிளைகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கெரள்ளலாம்.

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!