Saturday 5 August 2017

August 2017-விவேக வாணி

அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஆகஸ்ட் - 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல் தரையின் நடுவே அமைந்துள்ள யானைகள் கந்தர்வன் மயில் ஆகியவற்றைச் சித்தரிக்கும் இயற்கைக் காட்சியை அட்டையில் தாங்கி வருகிறது. ஆடி மாதம் முதல் மார்கழி முடிய மழைக்காலம் என்பதால் இல்லங்களில் இருந்தே கொண்டாடப்படும் பண்டிகைகள் அதிகம் வரும். அவற்றின் பொருள் உணர்ந்து கொண்டாடுவோமாக!

ஆகஸ்ட் - 22 கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜியின் நினைவு நாள் ஆகும். கேந்திர மையங்களில் புனித உணர்வுடன் இந்நாள் பின்பற்றப்படும். ஆகஸ்ட் - 25 விநாயகர் சதுர்த்தி பெரும் உற்சாகத்துடன் கேந்திர வளாகத்திலும் யாகங்களுடன் கொண்டாடப்படும். 25-ம் தேதி சுவாமி புறப்பாடும் ஊர்வலமும் உண்டு. செப்டம்பர் - 6 மூதாதையரை நினைவுபடுத்தும் மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. செப்டம்பர் - 11 சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோ சொற்பொழிவு ஆற்றியதின் நினைவுநாள் ஆகும். தேச பக்தியும் தெய்வ பக்தியும் கொண்டு செயல்பட இந்நாட்கள் நமக்கு உற்சாகம் அளிக்குமாக!

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!





                               Subscribe Online     or      Get Online eMagazine