Monday 22 February 2021

  

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி - 2021 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு உத்தம பக்தரான நந்தி தேவரின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. நந்தி தேவர் சிவபெருமானிடம் எத்தகைய வரங்களைக் கேரரினார் என்பது ஒரு அழகிய பிரார்த்தனைப் பாடலாக இம்மாத மந்திரமாக வெளி வருகிறது. ஆசிரியர் கட்டுரைப் பேரட்டியில் மிகச்சிறந்த தலைப்பில் பல ஆசிரியர்கள் எழுதிய பகுதிகள் வெளியாகின்றன. இத்துடன் அப்பகுதி நிறைவடைகிறது. விவேகவாணி பத்திரிக்கையின் விளம்பரத்திற்கும், விற்பனைக்கும் பெரும் உதவி செய்த விவேகானந்த கேந்திர விற்பனைப் பிரிவு அதிகாரியும், ஸ்ரீராம பக்தருமான ஸ்ரீ டி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இரங்கல் செய்தி வெளியாகிறது. கதைப் பகுதியில் லட்சிய ஆசிரியரைப் பற்றிய நீண்ட பகுதி நினைவுகூரத் தக்கது, பின்பற்றத் தக்கது.

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!



No comments:

Post a Comment