விவேகவாணியின் நவம்பர் - 2018 இதழ் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழும நிறுவனர் டாக்டர் ஜி. வெங்கடசாமிக்கு நூற்றாண்டு விழா அஞ்சலி செலுத்தும் வண்ணம் அவருடைய திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. அவர் பணி பற்றிய கட்டுரையும் வெளியாகிறது. 19.11.2018 கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜி அவர்களின் பிறந்த நாள் ஆகும். தலைமையகத்திலும், கேந்திரக் கிளைகளிலும் பக்தி சிரத்தையுடனும், இந்த நாள் கெரண்டாடப்படும். விசிஷ்டாத்வைதத்தில் பிரணவம் பற்றிய உபநிஷதத் தெரடர் இவ்விதழில் நிறைவுறுகிறது. இது தமிழுக்கு அரியதெரரு வரவு ஆகும். குடும்பக் கட்டமைப்பு பற்றிய புலிக் கதை வாசகர்களிடையே பிரபலமாகும் என்பது உறுதி. மற்ற கட்டுரைகள் வழக்கம் பேரல் தெரடருகின்றன.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!