அன்புள்ள வாசக நேயர்கட்கு
விவேகவாணியின் ஜனவரி 2018 இதழ் அட்டைப் படத்தில் கண்ணனை வளர்க்கும் யசோதை முருகனுக்கு வேல் கொடுக்கும் பராசக்தி ஆகிய ஓவியங்களைத் தாங்கி வருகிறது. இவை விவேகானந்தபுரம் பாரத மாதா சதனத்தில் அழகுற அமைந்துள்ள ஓவியங்கள் ஆகும். விவேகவாணியின் இவ்விதழின் சாந்தோக்கிய உபநிஷதத்தில் ஓம்காரம் பற்றிய விசி;ஷ்டாத்வைத விளக்கம் வெளியாகிறது. இது தமிழில் கிடைக்காத அரியதொரு ஆவணம் ஆகும். மிருகங்களுக்கும் ப10ச்சிகளுக்கும் பிரஞ்ஜை விழிப்புணர்வு உண்டு என்பது பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை சுவாரஸ்யமானது. மா. ஏக்நாத்ஜியின் வாழ்க்கையின் மிக முக்கியமானதொரு கட்டத்தை ஒரு கதை சித்தரிக்கிறது. சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா பொங்கல் விழா தைப்ப10சம் ஆகிய பண்டிகைகள் வரும் இம்மாதத்தில் வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம். தை பிறக்கிறது. நம் வாழ்க்கையிலும் வழி பிறக்கட்டும்.
வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.