விவேகவாணியின் நவம்பர் - 2016 இதழ் கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜி ரானடேயின் பிறந்த நாளை ஒட்டி நவம்பர் 19 அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறது. அட்டைப்படமாக நல்லகுடும்பம் என்பதை சித்தரிக்கும் அஞ்சல் தலைகளை தொகுத்து வெளியிடுகிறோம். இம்மாத மந்திரமும் உலக குழந்தைகள் தினம் குடும்ப உறவு இவற்றைக் குறிக்கும் வண்ணம் வெளியாகிறது. பிரணவம் எனும் ஓம்காரம் தொடரில் துவைத மரபில் பிரணவம் எனும் தொடர் இவ்விதழில் நிறைவு பெறுகிறது. விசிஷ்டாத்வைதத்தில் பிரணவம் என்ற தொடர் அரிய விஷயங்களை உள்ளடக்கியதாக அடுத்த இதழில் இருந்து தொடங்கும். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் பற்றிய கட்டுரை பாரத தொழில் வியாபார மரபில் குடும்பங்கள் ஆற்றும் நற்பணியை விவரிக்கின்றது. வாசகர்கள் அருகில் உள்ள கேந்திர மையத்தில் கேந்திர நிறுவனரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள அழைக்கின்றோம். உங்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!