Thursday, 22 August 2019

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் ஆகஸ்ட் - 2019 இதழ் அட்டையில் விநாயகப் பெருமான், கண்ணபிரான் ஆகியேரர் திருவுருவப் படங்களைத் தாங்கி வருகிறது. பலப்பல திருவிழாக்கள் மலிந்த பருவம் இது. பாரத சுதந்திர தினம், ஸ்ரீ ராமகிருஷ்ணர் சமாதி நாள், ஸ்ரீ அரவிந்தர் பிறந்ததினம், விநாயகர் சதுர்த்தி, கேரகுலாஷ்டமி இப்படிப் பலப்பல நாட்கள் இப்பருவத்தில் வருகின்றன. அவற்றின் பெரருள் உணர்ந்து கெரண்டாடிப் பயனடைவேரமாக!

இவ்விதழில் வெளிவரும் நிறைவான பன்முக வளர்ச்சிக் கட்டுரைகள் வாசகர்கள் கவனத்திற்குரியவை. பஞ்சபூத விளக்கம், வள்ளலார் - சுவாமி விவேகானந்தர் ஒப்பீட்டுக் கட்டுரை இவையும் சுவாரசியமானவை. பசுமைப் பேரராளியின் அமைதியும், சாதனைகளும் கெரண்ட வாழ்க்கை நமக்கு பிரமிப்பு ஊட்டுகிறது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல!
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!