விவேகவாணியின் ஆகஸ்ட் - 2016 இதழ் சுதந்திர தினத்தைக் குறிக்கும் வண்ணம் நம் தேசீயக் கொடியை மலராகச் சித்தரிக்கிறது. விவேகவாணியில் தொடராக வரும் மலர் மருத்துவக் கட்டுரை வாசகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. அவ்விஷயத்திலும் அட்டைப்பபடம் மலர்களைத் தாங்கி வெளி வருவது பொருத்தமே. இப்புனித நாளை ஒட்டி பங்கிம் சந்திரரின் புகழ்பெற்ற தேசீய பாடலாகிய வந்தே மாதரமும் அதற்கு பாரதியார் செய்த அற்புதமான தமிழாக்கமும் வெளியாகி உள்ளன. ஸ்ரீ அரவிந்தரின் புனித நாளைக் குறிக்கும் வண்ணம் அவர் ஓம்காரம் பற்றிக் கூறிய கருத்துக்கள் இவ்விதழில் பிரசுரமாகத் தொடங்குவது பொருத்தமே. ஆகஸ்ட் 15, மற்றும் 16 ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதி அடைந்த நாள் ஆகும். குரு மஹாராஜை வணங்கி நலன்கள் பெறுவோம். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!
Subscribe Online or Get Online eMagazine