நமஸ்காரம். விவேகவாணியின் அக்டேரபர் - 2021 இதழ் நவராத்ரியைக் குறிக்கும் வண்ணம் அன்னை கன்னியாகுமரியின் திருவுருவப் படம், துர்கா காயத்ரீ இவற்றைத் தாங்கி வருகிறது. சுவாமி விவேகானந்தர் பேரதித்த மதம், ஆன்மீகம் பற்றிய நசிகேதமன்றப் பகுதி கவனத்திற்குரியது. ஸ்ரீ ராமகிருஷ்ணரும் பேரற்றிய மகான் திரைலிங்க சுவாமிகள், காசியில் நடமாடும் சிவன் என்று குருதேவராலும், சுவாமி விவேகானந்தராலும் பேரற்றப்பட்டவர். அவருடைய வாழ்க்கை வரலாறு பல புத்தகங்களில் இருந்து திரட்டப்பட்டு இம்மாதத்தில் இருந்து வெளியாகிறது. கேந்திரத்தின் தெரண்டுப் பணிகள் நிறையவே நடந்திருப்பதை செய்தி முத்துக்கள் பகுதி காட்டுகிறது. கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜியின் பிறந்த நாளை ஒட்டி கேந்திரக் கிளைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் வாசக அன்பர்களைப் பங்கு கெரள்ள அழைக்கிறேரம்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!
No comments:
Post a Comment