அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட்டையில் அவர் படம் வெளியாகிறது. நல்லகுடும்பம் ஒரு பல்கலைக்கழகம் ஆசிரியர் கட்டுரைப் போட்டிப் பரிசுக் கட்டுரை ராமானுஜர் ஆகிய தொடர் கட்டுரைகள் நிறைவு பெறுகின்றன. இவை வாசகர்களின் கவனத்திற்குரியவை. டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரையிலான சமர்த்தப் பாரதப் பருவம் ஜனவரி – 1 கல்பதரு நாள் ஜனவரி – 12 சுவாமி விவேகானந்தர் ஜயந்தி மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இவை மிகுந்த புனிதத் தன்மை வாய்ந்தவை. கேந்திரக் கிளைகள் இந்நாட்களை பயபக்தியுடன் கொண்டாடும். வாசக அன்பர்கள் பங்கேற்க அழைக்கிறோம். வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.
Tuesday 12 December 2017
Wednesday 8 November 2017
November 2017 - விவேக வாணி
அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் ஸ்ரீ ராமாயண தரிசனம் சிறப்பிதழ் அக்டோபர் கேந்திரச் செய்தி இதழ் இவற்றுக்குப் பிறகு நவம்பர் - 2017 விவேகவாணி இதழ் வழக்கமான அம்சங்களுடன் வெளி வருகிறது. நவம்பர் - 19 கேந்திர நிறுவனர் ஸ்ரீ ஏக்நாத் ரானடே பிறந்த நாளாகும். அனைத்துக் கேந்திரக் கிளைகளும் இதனைச் சிறப்பாகக் கொண்டாடும். நவம்பர் 19 முதல் டிசம்பர் 3 வரை விவேகானந்தபுரம் கன்னியாகுமரியில் நமாமி சங்கமம் என்ற நிகழ்ச்சியில் ஆதிசங்கரரின் உரைநூல்கள் பாராயணம் சிறப்புரைகள் நடக்க உள்ளன. வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.
Saturday 14 October 2017
October 2017 - விவேக வாணி
விவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது.
நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய
ஆண்டறிக்கையாகும் இது.
சகோதரி நிவேதிதையின் 150-ம் ஆண்டு விழாவை ஒட்டி இவ்விதழில் அட்டையில் அவரது
உருவப்படமும் தலையங்கமாக கேந்திரத் துணைத்தலைவி மா. நிவேதிதா ரகுநாத் பிடே
சகோதரி நிவேதிதை பற்றி எழுதிய கட்டுரையும் வெளியாகின்றன. இம்மாத மந்திரமாக
ஓம்காரம் பற்றிய ஹிந்தி பஜனை ஒன்றும் அதன் தமிழாக்கமும் வெளியாகின்றன.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்.
Labels:
October,
சகோதரி நிவேதிதை,
விவேக வாணி
Location:
Tamil Nadu, India
Wednesday 20 September 2017
September 2017 - விவேக வாணி
Saturday 5 August 2017
August 2017-விவேக வாணி
அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஆகஸ்ட் - 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல் தரையின் நடுவே அமைந்துள்ள யானைகள் கந்தர்வன் மயில் ஆகியவற்றைச் சித்தரிக்கும் இயற்கைக் காட்சியை அட்டையில் தாங்கி வருகிறது. ஆடி மாதம் முதல் மார்கழி முடிய மழைக்காலம் என்பதால் இல்லங்களில் இருந்தே கொண்டாடப்படும் பண்டிகைகள் அதிகம் வரும். அவற்றின் பொருள் உணர்ந்து கொண்டாடுவோமாக!
ஆகஸ்ட் - 22 கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜியின் நினைவு நாள் ஆகும். கேந்திர மையங்களில் புனித உணர்வுடன் இந்நாள் பின்பற்றப்படும். ஆகஸ்ட் - 25 விநாயகர் சதுர்த்தி பெரும் உற்சாகத்துடன் கேந்திர வளாகத்திலும் யாகங்களுடன் கொண்டாடப்படும். 25-ம் தேதி சுவாமி புறப்பாடும் ஊர்வலமும் உண்டு. செப்டம்பர் - 6 மூதாதையரை நினைவுபடுத்தும் மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. செப்டம்பர் - 11 சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோ சொற்பொழிவு ஆற்றியதின் நினைவுநாள் ஆகும். தேச பக்தியும் தெய்வ பக்தியும் கொண்டு செயல்பட இந்நாட்கள் நமக்கு உற்சாகம் அளிக்குமாக!
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!
ஆகஸ்ட் - 22 கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜியின் நினைவு நாள் ஆகும். கேந்திர மையங்களில் புனித உணர்வுடன் இந்நாள் பின்பற்றப்படும். ஆகஸ்ட் - 25 விநாயகர் சதுர்த்தி பெரும் உற்சாகத்துடன் கேந்திர வளாகத்திலும் யாகங்களுடன் கொண்டாடப்படும். 25-ம் தேதி சுவாமி புறப்பாடும் ஊர்வலமும் உண்டு. செப்டம்பர் - 6 மூதாதையரை நினைவுபடுத்தும் மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. செப்டம்பர் - 11 சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோ சொற்பொழிவு ஆற்றியதின் நினைவுநாள் ஆகும். தேச பக்தியும் தெய்வ பக்தியும் கொண்டு செயல்பட இந்நாட்கள் நமக்கு உற்சாகம் அளிக்குமாக!
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!
Thursday 6 July 2017
July 2017-விவேக வாணி
அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந்துள்ள ஸ்ரீ கோபால கிருஷ்ணரின் திருவுருவச் சிலையின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. அடுத்து வரும் மாதங்களில் வேதப் பயிற்சித் தொடக்கம் காயத்ரீ ஜபம் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த நாள் ஆகியவை ஸ்ரீகிருஷ்ணர் நம் நாட்டிற்கு ஆற்றிய மகத்தான பணிகளை நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும். ஸ்ரீ ராமானுஜ மரபில் உபநிஷத விளக்கத்தில் ஓம்காரம் என்பது தமிழுக்குக் கிடைத்த நல் வரவு ஆகும். இவை அரிய நூல்கள் என்பதால் ஆங்காங்கே சம்ஸ்கிருதச் சொற்றொடர்களையும் இணைத்துள்ளோம். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!
Friday 9 June 2017
June 2017-விவேக வாணி
அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூன் - 2017 இதழ் விவேகானந்தபுரம் பாரத மாதா சதனத்தின் நடராஜ பெருமானின் திருவுருவச் சிலையின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. சீக்கிய சம்பிரதாயத்தில் பிரணவம் பற்றியக் கருத்துக்களை பாரத நாட்டில் பல மொழிகளிலும் நாம் பரப்ப வேண்டும். அதன் முதல் கட்டமாக குருகிரந்த சாகெப்பின் மையக் கருத்தாகிய ஜப்புஜி என்ற நூலின் தமிழாக்கம் தமிழில் வெளிவருகிறது. மற்ற அம்சங்கள் இடவசதிக்கேற்ப வெளி வருகின்றன. ஜூலை – 4 சுவாமி விவேகானந்தரின் சமாதி தினத்தை ஒட்டி கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் அன்னபூஜை நடக்க இருக்கிறது. அன்பர்கள் பங்குகொள்ள அழைக்கிறோம். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!
Friday 2 June 2017
May 2017-விவேக வாணி
அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மே - 2017 இதழ் அட்டைப்படத்தில் திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமியின் திருவுருவச்சிலையின் படத்தைத் தாங்கி வருகிறது. இந்த அழகான காட்சி கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பாரத மாதா சதனத்தில் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீ ராமானுஜரின் 1000-மாவது பிறந்த நாள் விழாவைப் பேரற்றும் வண்ணம் அவருடைய கெரள்கையின்படி உபநிஷதங்களுக்கு எழுதப்பட்ட உரையும், ஆழ்வார்கள் பாடல்களுக்கு அவர் கண்ட விளக்கமும் கெரடுக்கப்படுகின்றன. விசிஷ்டாத்வைத மரபில் உபநிஷதங்களின் உரை கிடைத்தற்கரிய பெரக்கிஷம் ஆகும். அதனால் ஸ்ரீ ஸ்ரீரங்கராமானுஜரின் உரையில் இருந்து பல சம்ஸ்கிருதத் தெரடர்களையும், பிரணவம் எனும் ஓம்காரம் தெரடரில் சேர்த்து இருக்கிறேரம். புறச்சூழல் சீரழிவைக் கண்டு வருந்தி ஸ்ரீமதி கமலா செளத்ரி எழுதிய கட்டுரையும் வாசகர்களின் கவனத்திற்குரியது. ஸ்ரீ ரமண மஹரிஷி கூறிய வேதாந்தக் கதைகள் இவ்விதழில் இடம் பெற்றிருக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)