Friday, 16 October 2020

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் அக்டேரபர் - 2020 இதழ் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கல்வித் தெய்வத்தின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. மாதம் ஒரு மந்திரமும், சரஸ்வதி தேவியைப் பற்றியது. அன்னை நமக்கெல்லாம் ஞானச் செல்வத்தைப் தருவாளாக! 

ஆறு மாதங்களுக்குப் பிறகு விவேகவாணி அச்சிடப்பட்ட இதழாக வெளி வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இவ்விதழின் நற்குண வளர்ச்சி பற்றிய விவேகானந்த கேந்திரப் பத்திரிக்கையின் தமிழாக்கம் நிறைவடைகிறது. பலரையும் கவர்ந்த இதழ் அது. 

நிறைவான பன்முக வளர்ச்சியில் ஹெர்மன் ஈ. டேலியின் கட்டுரை அதன் பெரருட்சிறப்புக்காக ஒரு தடவையும், அவ்வாசிரியரின் நேர்மைச் சிறப்புக்காக ஒரு தடவையுமாக இரண்டு தடவை படிக்கத் தகுந்தது. வாசக அன்பர்களுக்கு விஜயதசமி மற்றும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கெரள்கிறேரம்.    

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!Saturday, 26 September 2020

Vivekvani செப்டம்பர் 2020

அன்புள்ள வாசக நேயர்களுக்கு, நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2020 இதழ் சர்வஜ்ஞரான வேதாந்த தேசிகரின் நினைவைப் பேரற்றும் வண்ணம் அவருடைய திருவுருவப் படத்தையும், அவர் எழுதிய திருச்சின்ன மாலை தமிழ்ப் பாடலை இம்மாத மந்திரமாகவும் தாங்கி வருகிறது. காலம் சென்ற பேராசிரியர் என். சுப்பிரமணிய பிள்ளை அவருடைய துணைவியார், பேராசிரியர் நாகம் சுப்பிரமணியம் ஆகியேரருக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியும் வெளி வருகிறது. இவ்விதழும் டிஜிட்டல் வடிவத்தில் கேந்திர இணைய தளத்தில் வெளியாகிறது. கணினி யுகத்தில் செயற்கை மூளை பற்றிய அறிவு ஆராய்ச்சியில் பாரத நாட்டின் ரஸம் என்ற கெரள்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதனை மாண்டூக்கிய உபநிஷதத்துடன் இணைக்கும் அற்புதப் பகுதியை எழுதும் திறமை சுவாமி நித்ய சைத்தன்ய யதி ஒருவருக்கே உண்டு. சிறுசிறு இலக்கிய குறிப்புக்களில் பிரணவம் பற்றிய வருணனையும் வெளியாகின்றது. நவராத்திரி, தீபாவளி விழாக்களுக்கு முன்கூட்டியே வாசகர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கெரள்கிறேரம். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Tuesday, 28 July 2020

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். 
விவேகவாணியின் ஜுலை - 2020 இதழ் கேந்திரத்தின் இணைய தளத்தில் மட்டுமே வெளியாகிறது. கெரரேரனா ஊரடங்கு அமுலில் இருப்பதால் பத்திரிக்கையை அச்சிட்டு வழங்க முடியவில்லை. ஆகஸ்ட் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவ்விதழின் அட்டைப் படத்தில் விநாயகர் காட்சி கெரடுக்கிறார். ஆதிசங்கரரின் ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் என்ற பாடல் தமிழாக்கத்துடன் மாதம் ஒரு மந்திரமாக வெளி வருகிறது. ஆகஸ்ட் 22-ம் தேதி மா. ஏக்நாத்ஜியின் புண்ணிய திதியும் ஆகும். 1982-ஐப் பேரலவே இந்த ஆண்டும் அவருடைய நினைவு தினம் விநாயகர் சதுர்த்தி அன்றே வருகிறது. அம்மாமனிதர் காட்டிய வழியில் செல்ல இறையருள் நமக்குப் பலம் கெரடுக்குமாக! அவருடைய ஆன்மீக வாழ்வு என்ற நூலில் இருந்தும், கடிதத் தெரகுப்பில் இருந்தும் பல பகுதிகள் வெளியாவது அவருக்குரிய அஞ்சலியாக அமையும். மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல் வெளியாகின்றன. 

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Thursday, 2 July 2020

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் ஜூன் - 2020 இதழ் கெரரேரனா ஊரடங்கு காரணத்தால் இணையதளத்தில் மட்டுமே வெளியாகிறது. அச்சு வசதிகள் இருந்தும், பத்திரிக்கைகளை சந்தாதாரர்களுக்குக் கெரண்டு சேர்க்கும் வசதிகள் முடங்கியதாலும், சென்னையில் கடுமையான ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருப்பதாலும் அச்சுப் பிரதிகளை வழங்கவில்லை. இவ்விதழின் அட்டைப் படத்தில் குரு பூர்ணிமையைக் குறிக்கும் வண்ணம் வேத வியாசர், ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியேரர் திருவுருவப் படங்களை வெளியிடுகிறேரம். இந்த மாத மந்திரமாக சுந்தரமூர்த்தி நாயனார் எழுதி சான்றேரர்களுக்கும் பக்தர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்தும் பாடல் பகுதி மாதம் ஒரு மந்திரமாக வெளி வருகிறது. ஜூலை -4 சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்.   
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!