அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு இருக்கும் 27 அடி உயரமுள்ள வீரஹனுமானின் திருவுருவச்சிலையின் புகைப்படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. அவரைப்போல் கடமை உணர்வும் பக்தியும் கொண்டு தேசப்பணிக்கு உரிய ராமநவமி திருவிழா நமக்கு உற்சாகமூட்டுமாக! இவ்விதழில் பிரதம மந்திரியின் ராமாயண தரிசன துவக்க உரையில் சத்குரு மாதா அமிர்தானந்தமயீ தேவி ராமாயண தரிசன வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா பற்றிய வர்ணனையும் தகுந்த புகைப்படங்களுடன் இடம் பெறுகின்றன. இடவசதி இன்மையால் மற்ற அம்சங்கள் குறைத்து வெளியிடப்படுகின்றன. ராமநவமி திருவிழா தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. நமஸ்தே மஹாராஷ்டிரா இவ்விதழில் நிறைவடைகிறது. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!