Tuesday, 8 May 2018


அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் மே 2018 இதழ் அட்டையில் வண்ணத்துப் பூச்சி, தேனீ முதலிய சிற்றுயிர் இனங்களின் படத்தைத் தாங்கி வருகிறது. விலங்குகளுக்கும், பிரஜ்ஞை உணர்வு உண்டு என்னும் கட்டுரையை இந்தப் படம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
உடல் நலம் பற்றிய நிறைவான பன்முக வாழ்க்கை கட்டுரை வாசகர்களின் கவனத்திற்குரியது. இவ்விதழ் நசிகேதமன்றம் பகுதி சற்று மாறுபட்ட சுவையுடன் வெளி வருகிறது.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும்  பெருகப்  பிரார்த்திக்கிறேரம்!         

Tuesday, 10 April 2018

April 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ராமகிருஷ்ண மிஷன் தெரண்டு மைய வளாகத்தில் அமைந்த சகேரதரி நிவேதிதையின் சிலையின் நிழற்படம் இது ஆகும். ஒருக்கால் சகேரதரியின் முதலாவதான முழு உயரச் சிலையாக இது இருக்கக்கூடும்.
ஒருவிதத்தில் இவ்விதழ் சகேரதரி நிவேதிதை சிறப்பிதழாகவே அமைந்து விட்டது எனலாம். சகேரதரியின் விரிவான வாழ்க்கை வரலாற்று நூலின் மதிப்புரை, பரிசு பெற்ற ஆசிரியர்களின் கட்டுரைகள் ஆகியவையும், சகேரதரி நிவேதிதையைப் பற்றியவையே.
செக்குலரிசம் பற்றிய விரிவான கேள்வி, பதில் பகுதி வாசகர்களின் கவனத்திற்குரியது.
விளம்பி வருடம் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கெரள்கிறேரம்.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும்  பெருகப்  பிரார்த்திக்கிறேரம்! 

Tuesday, 6 March 2018

Vivekavani March 2018


அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் மார்ச் 2018 இதழ், ஸ்ரீராமநவமியைக் குறிக்கும் வண்ணம் ஸ்ரீராமனைத் துதித்து வாலி கூறிய துதியான கம்பராமாயணப் பாடல் வெளி வருகிறது.
அட்டையில் கேந்திரத் தலைவர் மா. பி. பரமேஸ்வரன்ஜி, 'பத்ம விபூஷண் என்ற உயரிய விருதைப் பெறும் சந்தர்ப்பத்தில் அவருடைய திருவுருவப் படம் வெளியாகிறது. அவருடைய வாழ்க்கை விபரங்கள், உட்பக்கம் ஒன்றில் வெளியாகின்றன.
    


Tuesday, 6 February 2018

February 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் பேரற்றி சுவாமி விவேகானந்தர் எழுதிய 'கண்டனபவ பந்தன என்ற வங்காளி மெரழிப் பாடலின் தமிழ் மெரழி பெயர்ப்புக் கவிதை வெளியாகிறது. 

அட்டைப்படத்தில் வெளியாகி இருக்கும் சுவாமி விவேகானந்தரின் ஓவியத்தை வரைந்தவர், ஸ்ரீ எஸ்.எம். பண்டிட்டின் சீடரான ஸ்ரீ ஆனந்த் தேரம்பரே. விவேகானந்தபுரம் 'எழுமின், விழிமின்  கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ஏக்நாத் ரானடே ஆகியேரரின் வண்ண ஓவியங்களையும் தீட்டியவர் ஸ்ரீ ஆனந்த் தேரம்பரே அவர்களே. 

வாழ்க்கையில் பெரும் தேரல்விகளைச் சந்தித்தும் மனம் தளராத மாமனிதர்களின் குறிப்புக்கள், 'இதயத்தைத் திருடும் இனிய கதைகள் இடம் பெறுகின்றன. பிற விஷயங்கள் வழக்கம் பேரல.

வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும்  பெருகப்  பிரார்த்திக்கிறேரம்!

Friday, 19 January 2018

January 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு

விவேகவாணியின் ஜனவரி 2018 இதழ் அட்டைப் படத்தில் கண்ணனை வளர்க்கும் யசோதை முருகனுக்கு வேல் கொடுக்கும் பராசக்தி ஆகிய ஓவியங்களைத் தாங்கி வருகிறது. இவை விவேகானந்தபுரம் பாரத மாதா சதனத்தில் அழகுற அமைந்துள்ள ஓவியங்கள் ஆகும். விவேகவாணியின் இவ்விதழின் சாந்தோக்கிய உபநிஷதத்தில் ஓம்காரம் பற்றிய விசி;ஷ்டாத்வைத விளக்கம் வெளியாகிறது. இது தமிழில் கிடைக்காத அரியதொரு ஆவணம் ஆகும். மிருகங்களுக்கும் ப10ச்சிகளுக்கும் பிரஞ்ஜை விழிப்புணர்வு உண்டு என்பது பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை சுவாரஸ்யமானது. மா. ஏக்நாத்ஜியின் வாழ்க்கையின் மிக முக்கியமானதொரு கட்டத்தை ஒரு கதை சித்தரிக்கிறது. சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா பொங்கல் விழா தைப்ப10சம் ஆகிய பண்டிகைகள் வரும் இம்மாதத்தில் வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம். தை பிறக்கிறது. நம் வாழ்க்கையிலும் வழி பிறக்கட்டும்.
வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம். 

Tuesday, 12 December 2017

December 2017 - விவேக வாணி



அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட்டையில் அவர் படம் வெளியாகிறது. நல்லகுடும்பம் ஒரு பல்கலைக்கழகம் ஆசிரியர் கட்டுரைப் போட்டிப் பரிசுக் கட்டுரை ராமானுஜர் ஆகிய தொடர் கட்டுரைகள் நிறைவு பெறுகின்றன. இவை வாசகர்களின் கவனத்திற்குரியவை.  டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரையிலான சமர்த்தப் பாரதப் பருவம் ஜனவரி – 1 கல்பதரு நாள் ஜனவரி – 12 சுவாமி விவேகானந்தர் ஜயந்தி மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இவை மிகுந்த புனிதத் தன்மை வாய்ந்தவை. கேந்திரக் கிளைகள் இந்நாட்களை பயபக்தியுடன் கொண்டாடும். வாசக அன்பர்கள் பங்கேற்க அழைக்கிறோம். வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.  







                               Subscribe Online     or      Get Online eMagazine

Wednesday, 8 November 2017

November 2017 - விவேக வாணி



அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் ஸ்ரீ ராமாயண தரிசனம் சிறப்பிதழ் அக்டோபர் கேந்திரச் செய்தி இதழ் இவற்றுக்குப் பிறகு நவம்பர் - 2017 விவேகவாணி இதழ் வழக்கமான அம்சங்களுடன் வெளி வருகிறது. நவம்பர் - 19 கேந்திர நிறுவனர் ஸ்ரீ ஏக்நாத் ரானடே பிறந்த நாளாகும். அனைத்துக் கேந்திரக் கிளைகளும் இதனைச் சிறப்பாகக் கொண்டாடும். நவம்பர் 19 முதல் டிசம்பர் 3 வரை விவேகானந்தபுரம் கன்னியாகுமரியில் நமாமி சங்கமம் என்ற நிகழ்ச்சியில் ஆதிசங்கரரின் உரைநூல்கள் பாராயணம் சிறப்புரைகள் நடக்க உள்ளன. வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்







                               Subscribe Online     or      Get Online eMagazine