Friday, 1 October 2021


 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2021 இதழ் ஸ்ரீமத் சுவாமி மதுரானந்தாஜி அவர்களின் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. அவருடைய நூற்றாண்டு விழாவை ஒட்டி அவருடைய வாழ்க்கை வரலாறும், புகைப்படங்களும் அவர் எழுதிய பாடல்களும் வெளியாகின்றன. பிரணவம் எனும் ஓம்காரம் பகுதியில் சுவாமி சிவானந்தர் அவர்கள் மாண்டூக்கிய உபநிஷத உரையில் பிரணவ ரகசியம் ஸ்ரீ ராம கீதா ஆகிய நூல்களின் கருத்துக்களை உள்ளடக்கி எழுதிய தெரடர் ஆரம்பம் ஆகிறது. ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஆச்சாரியராகப் புகழ் பெற்ற வேதாந்த தேசிகரின் பாதுகா ஸஹஸ்ரம் எனும் நூலில் இருந்து பிரணவப் பகுதிகள் வெளியாகின்றன. ஸ்ரீராமகிருஷ்ணரின் கல்வி அறிவு, திருநீற்றின் மகிமை, ஸ்ரீ கிருஷ்ணரின் கல்வி அறிவு பற்றிய பகுதிகள் நசிகேதமன்றத்தில் வெளியாகின்றன. பிரம்ம ஞானியான ஸ்ரீ பி.ஆர். ராஜம் ஐயரின் சில கதைகள் இவ்விதழில் இடம் பெறுகின்றன. எட்வர்டு கேரல்டுஸ்மித்தின் நிறைவான பன்முக வளர்ச்சிக் கட்டுரை வெளிநாட்டு நிதி உதவி வளரும் நாடுகளுக்கு எத்தனை பிரச்சினைகளை உண்டாக்குகிறது என்பதை விளக்குகிறது. மனுநீதிச் சேரழர் கதை நம் மன்னர்களின் நியாய உணர்வை, அற உணர்வை எடுத்துக் காட்டுகிறது. இவ்விதழில் அத்தெரடர் நிறைவு பெறுகிறது. செப்டம்பர் - 11 சுவாமி விவேகானந்தர் சிக்காகேரவில் செரற்பெரழிவு ஆற்றிய உலக சகேரதரத்துவ தினம் கேந்திரக் கிளைகளில் கெரண்டாடப்படும். அருகில் இருக்கும் கிளைகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கெரள்ளலாம்.

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Saturday, 28 August 2021

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் ஆகஸ்ட் - 2021 இதழ் பாரத சுதந்திரத்தின் 75-வது ஆண்டுத் துவக்கத்தைக் குறிக்கும் வண்ணம் பாரத மாதாவின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. ஸ்ரீ அரவிந்தரின் உத்தரவின் பேரில் ஸ்ரீ தி.வி. கபாலி சாஸ்திரி அவர்களால் எழுதப்பட்ட பாரதீ ஸ்தவம் என்ற    நூலில் இருந்து பிரார்த்தனைப் பாடல்கள் இம்மாத மந்திரமாக வந்துள்ளன. நிறைவான பன்முக வளர்ச்சிக் கட்டுரை உங்கள் கவனத்திற்குரியது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல். குரு நித்ய சைதன்யரின் பிரணவ விளக்கம் இவ்விதழில் நிறைவு பெறுகிறது. மிகச் சிறப்பான கட்டுரைத் தெரடர் இது.  

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!


Saturday, 24 July 2021

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை - 2021 இதழ் தேனி சித்பவானந்த ஆசிரமத்தின் நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ஓம்காரானந்தாஜி அவர்களின் மஹாசமாதியை

க் குறிக்கும் வண்ணம் அந்த ஞானியின் திருவுருவப் படத்தைத் தாங்கி வருகிறது. நித்ய சைத்தன்ய யதியின் பிரணவம் பற்றிய கட்டுரை முடியும் நிலையில் இருக்கிறது. தமிழுக்கு இது ஒரு சிறப்பான வரவு ஆகும். திரு. ரகுநாத் மாஷேல்கரின் இந்தியத் தெரழில் நுணுக்கம், விஞ்ஞானம் பற்றிய கட்டுரை இவ்விதழில் தமிழாக்கமாக  வெளியாகிறது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல்.

குரு பூர்ணிமா நன்னாளைக் குறிக்கும் வண்ணம் இந்த மாத மந்திரம் குரு துதியாக வெளியாகிறது. பெரது வாழ்வுக்கும், கேந்திரத்திற்கும் நல்ல தெரண்டு புரிந்த பலரை இழந்து நாம் வாடும் காலம் இது. அவர்களுக்கு நம் அஞ்சலி!

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Monday, 28 June 2021

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் ஜூன் - 2021 இதழ் சுவாமி விவேகானந்தரின் சமாதி தினத்தைக் (ஜூலை - 4) குறிக்கும் வண்ணம் அவர் பெருமையைப் பேரற்றும் நான்கு நூல்களின் அட்டைப் படத்தைத் தாங்கி வருகிறது. அந்நூல்களைத் தெரகுத்த ஸ்ரீமத் சுவாமி கமலாத்மானந்தாஜி அவர்களின் திருவுருவப் படத்தையும் தாங்கி வருகிறது. நசிகேதமன்றத்தின் இரண்டு பெரிய பதில்கள் வாசகர்கள் ஆழ்ந்து கவனிக்கத் தக்கவை. இதயத்தைத் திருடும் இனிய கதைகளும் கவனத்திற்குரியவை. உலக யேரகா தினத்தை முன்னிட்டுப் பிராணச் சக்தியைப் பேரற்றும் வேத மந்திரம் இம்மாத மந்திரமாக வெளி வருகிறது.  

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Saturday, 8 May 2021

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் மே - 2021 இதழ் அக்ஷய திருதியைக் கெரண்டாடும் வண்ணம் தங்க நகைகளைச் சித்தரிக்கிறது. சிவனையும், திருமாலையும் பெரன்னாக வருணிக்கும் பாடல்கள் மாதம் ஒரு மந்திரமாக வெளியாகின்றன. ரேரபின் பானர்ஜியின் பசுமைப் பேரராளி வாழ்க்கை வரலாறு ஆழ்ந்த கவனத்திற்குரியது. ஒட்டப்பிடாரம் திருவிளக்குப் பூஜை முதலிய கேந்திரப் பணிகள் கடினமான சூழலில் நடத்தப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது. 

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!



Saturday, 17 April 2021

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு, 

நமஸ்காரம். 

விவேகவாணியின் ஏப்ரல் - 2021 இதழ்  ஸ்ரீ ராம நவமியைக் கெரண்டாடும் வண்ணம் ஸ்ரீராமர் முதலிய திருமூவரை குகன் படகிலேற்றி கங்கையைத் தாண்டி எடுத்துச் செல்லும் வண்ணப் படம் வெளியாகிறது. இது கன்னியாகுமரி விவேகானந்தபுரம் ராமாயண தரிசனம் கண்காட்சியில் உள்ள படம் ஆகும். பெரும் புலவர் க. வெள்ளை வாரணாரின் பிரணவம் பற்றிய குறிப்பு அரியதெரரு ஆராய்ச்சிக் கட்டுரை ஆகும். இவ்விதழில் அது நிறைவடைகிறது. கேந்திரப் பணிகள் பற்றிய விபரமான அறிக்கையும் வெளியாகின்றது.

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!


Saturday, 3 April 2021

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் - 2021 இதழ் உலகத் தண்ணீர் தினத்தைக் கெரண்டாடும் வண்ணம் அழகிய அட்டைப் படத்துடன் கங்கா தேவியை வணங்குகிறது. திருக்குறள் பாடல்கள் மாத மந்திரமாக வெளியாகின்றன. கெரரேரனா பாதிப்புக்குப் பிறகு கேந்திரப் பணிகள் புத்துணர்வுடன் திரும்பவும் ஆரம்பித்து இருக்கின்றன. விரிவான அறிக்கைகள் இவ்விதழுக்குப் பெருமை சேர்க்கின்றன.  
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!