Thursday, 5 March 2020

விவேகவாணியின் மார்ச் 2020

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,


நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2020 இதழ் காலம் சென்ற கேந்திர அகிலபாரதத் தலைவர் மா. பரமேசுவரன்ஜி அவர்கட்கு அஞ்சலி செலுத்தும் சிறப்பிதழாக வெளி வருகிறது. அட்டையில் அவர் திருவுருவப்படம் வெளி வருகிறது. அவரைப் பற்றி பிரதம மந்திரி மேதகு நரேந்திர மேரதியும், கேந்திரத் துணைத்தலைவர் மா.அ. பாலகிருஷ்ணன்ஜியும் விடுத்த இரங்கல் செய்திகள் வெளியாகின்றன. 

ஸ்ரீராம நவமியை ஒட்டி, கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில் கம்பன் எழுதிய வாழ்த்துப் பாடல் இந்த மாத மந்திரமாக வெளிவருகிறது.
கேந்திரச் செய்திகள் பற்றிய பகுதி சற்று விரிவாகவே இருப்பதால் வழக்கமான பகுதிகள் சில விடுபட்டிருக்கின்றன.

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Saturday, 29 February 2020

அன்புள்ள வாசக நேயர்கட்கு
நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி – 2020 இதழில் மஹாசிவராத்ரியை முன்னிட்டு அட்டைப் படத்தில் நடராஜர் படமும் மாதம் ஒரு மந்திரமாக ஆதிசங்கரரின் சிவானந்த லஹரிப் பாடலு;ம வெளியாகின்றன. குழயரசுத் தலைவரின் கன்னியாகுமரி விஜயம் கேந்திர வளாகத்தில் அவர் ஆற்றிய உரை பற்றிய தகவல் தொகுப்பு படங்களுடன் வெளியாகிறது. சமர்த்த பாரதப் பருவம் பரவலாக கேந்திரக் கிளைகளில் கொண்டாடப்பட்டது. கீதைத் திருவிழா அன்னப10ஜை திருவிளக்குப் ப10ஜை பற்றிய செய்திகளும் நிறையவே வெளியாகின்றன.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.  

Thursday, 23 January 2020

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் ஜனவரி - 2020 இதழ் பாறை நினைவுச் சின்னத்தின் பெரன்விழா ஆண்டின் இலச்சினையை (லேரகேர) அட்டைப் படமாகத் தாங்கி வருகிறது. பெரன்விழா ஆண்டை முன்னிட்டு பாறை நினைவுச் சின்னத்தின் வரலாறு பற்றிய தெரடர் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறேரம். கேள்
வி, பதில் பகுதியில் கன்னியாகுமரி மாவட்ட அன்பர் ஒருவரின் பல கேள்விகள் இடம் பெறுகின்றன. பசுமைப் பேரராளியின் வாழ்க்கை வரலாறு, நம்மைத் திடுக்கிடச் செய்யும் திருப்பங்களுடன் வெளி வருகிறது. நற்குணவளர்ச்சிக் கட்டுரையும், முழுமையான பன்முக வளர்ச்சிக் கட்டுரையும் கவனித்துப் படிப்பதற்கு உரியன. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பிறந்த நாள், சிவராத்ரி முதலிய முக்கிய பண்டிகைகள் வரும் நாட்களை அவற்றின் பெரருள் உணர்ந்து கெரண்டாட இறையருள் துணை நிற்குமாக!
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Saturday, 14 December 2019

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2019 இதழ் குருநானக் தேவரின் 550-வது பிறந்த நாள் விழாவைக் கெரண்டாடும் வண்ணம் அவருடைய திருவுருவப் படத்தையும், அவரேரடு தெரடர்புள்ள டேரா பாபா நானக், கர்த்தாபூர், குருத்வாராக்களின் படங்களையும் தாங்கி வருகிறது. அந்த அவதாரப் புருஷர் எழுதிய ஜப்புஜியின் முழு மெரழி பெயர்ப்பை வெளியிடுவதில் விவேகவாணி பெருமைகெரள்கிறது.
ஆசிரியர் கட்டுரைப் பேரட்டியின் கடைசிப் பகுதி வெளியாகிறது. இவ்வாண்டு கட்டுரைப் ே பாட்டியில் கலந்து கெரண்டு பரிசு ெ பற்ற அனைத்து ஆசிரியர்களின் கட்டுரைகளின் பகுதிகள் வெளியிட முடிந்தது மகிழ்ச்சி தருகிறது. ஆசிரியப் பெருமக்களுக்கு அவர்களுடைய கடுமையான உழைப்பைப் பேரற்றி நாம் செலுத்தும் மரியாதை ஆகும். சுப்பிரமணியப் புஜங்கத்தின் நிறைவுப் பகுதி
மா. அ. பாலகிருஷ்ணன்ஜியின் அனுபவங்கள், பிற கட்டுரைகள் கவனத்திற்குரியவை. டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை சமர்த்த பாரதப் பருவம் கேந்திரக் கிளைகளால் உற்சாகத்துடன் கெரண்டாடப்படும். அன்பர்கள் பங்கேற்க அழைக்கிறேரம்.   
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Thursday, 21 November 2019

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். நவம்பர் - 2019 இதழ் இராமேஸ்வரத்தில் கேந்திர கிராம முன்னேற்றத் திட்டம் நடத்திய   பிரம்மாண்டமான திருவிளக்குப் பூஜையின் வண்ணப் படத்தைத் தாங்கி வருகிறது. எத்தனையேர இடைஞ்சல்களுக்கு நடுவிலும் இந்த மாபெரும் விழாவை நடத்திய தெரண்டர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
சடங்குகள் பற்றிய கேள்வி பதில் கவனத்திற்குரியது. அறம், பெரருள், இன்பம், வீடு பற்றிய நற்குண வளர்ச்சிக் கட்டுரை கவனித்துப் படிப்பதற்குரியது. கேந்திர துணைத் தலைவர் மா. அ. பாலகிருஷ்ணன்ஜியின் ஆரம்ப கால கேந்திர அனுபவங்கள் சுவையானவை.
அன்பர் திரு. துளஸிராம் அவர்களின் அனைத்து தமிழாக்கங்களையும் விவேகவாணியில் வெளியிட்டேரம். ஆதிசங்கரரின் சுப்பிரமண்ய புஜங்கம் பாடலின் தமிழாக்கம் கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்புப் பிரார்த்தனையாக வெளி வருகிறது.
நவம்பர் - 19 மா. ஏக்நாத்ஜி அவர்களின் பிறந்த தினம் ஆகும். கேந்திர மையங்களில் இவ்விழா பணிவன்புடன் கெரண்டாடப்படும். அன்பர்களை பங்கு கெரள்ள அழைக்கிறேரம். பிற கட்டுரைகள், அம்சங்கள் வழக்கம்பேரல்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Thursday, 17 October 2019

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். கன்னியாகுமரி விவேகானந்தப்  பாறை நினைவுச் சின்னம், தன் 50-ஆம் ஆண்டில் தேசீய, தெய்வீக, தார்மீக சேவைப்பணியில் பீடு நடை பேரடுகிறது. இவ்வாண்டை அகில இந்திய மக்கள் தெரடர்பு ஆண்டாக நடைமுறைப்படுத்த கேந்திரம் தீர்மானித்திருக்கிறது.
அதன்படி 2019 செப்டம்பர் முதல் வாரத்தில் கேந்திரத் தலைவர்கள், பாரதக் குடியரசுத் தலைவர் மேதகு ராம்நாத் கேரவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் மேதகு வெங்கையா நாயுடு, பாரதப் பிரதமர் மேதகு நரேந்திரமேரதி ஆகியேரரைச் சந்தித்து, பாரத நாட்டின் பெரது வாழ்வில் கன்னியாகுமரி பாறை நினைவுச் சின்னத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, கேந்திரப் பணிகளையும் விளக்கிக் கூறினார்கள். தேசத் தலைவர்களின் நல்வாழ்த்துக்களையும், அறிவுரைகளையும் பெற்றார்கள்.
இம்மாத விவேகவாணியின் அட்டையில் தேசத் தலைவர்களைக் கேந்திர அதிகாரிகள் சந்திக்கும் காட்சிகள் இடம் பெறுகின்றன.
இவ்விதழ் பாறை நினைவுச் சின்ன 50-ம் ஆண்டு சிறப்பிதழாகக் கட்டுரைகளைத் தாங்கி, அதிகப் பக்கங்களுடன் வெளிவருகிறது.
காஞ்ஜன் காடு பாப்பா ராம்தாஸின் நீதிக் கதைகள் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தவை. அவை இவ்விதழில் நிறைவு பெறுகின்றன.
பிற கட்டுரைகள், அம்சங்கள் வழக்கம்பேரல்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!