Thursday, 21 November 2019

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். நவம்பர் - 2019 இதழ் இராமேஸ்வரத்தில் கேந்திர கிராம முன்னேற்றத் திட்டம் நடத்திய   பிரம்மாண்டமான திருவிளக்குப் பூஜையின் வண்ணப் படத்தைத் தாங்கி வருகிறது. எத்தனையேர இடைஞ்சல்களுக்கு நடுவிலும் இந்த மாபெரும் விழாவை நடத்திய தெரண்டர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
சடங்குகள் பற்றிய கேள்வி பதில் கவனத்திற்குரியது. அறம், பெரருள், இன்பம், வீடு பற்றிய நற்குண வளர்ச்சிக் கட்டுரை கவனித்துப் படிப்பதற்குரியது. கேந்திர துணைத் தலைவர் மா. அ. பாலகிருஷ்ணன்ஜியின் ஆரம்ப கால கேந்திர அனுபவங்கள் சுவையானவை.
அன்பர் திரு. துளஸிராம் அவர்களின் அனைத்து தமிழாக்கங்களையும் விவேகவாணியில் வெளியிட்டேரம். ஆதிசங்கரரின் சுப்பிரமண்ய புஜங்கம் பாடலின் தமிழாக்கம் கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்புப் பிரார்த்தனையாக வெளி வருகிறது.
நவம்பர் - 19 மா. ஏக்நாத்ஜி அவர்களின் பிறந்த தினம் ஆகும். கேந்திர மையங்களில் இவ்விழா பணிவன்புடன் கெரண்டாடப்படும். அன்பர்களை பங்கு கெரள்ள அழைக்கிறேரம். பிற கட்டுரைகள், அம்சங்கள் வழக்கம்பேரல்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

No comments:

Post a Comment