Monday, 28 March 2022
நமஸ்காரம்.
விவேகவாணியின் மார்ச் - 2022 இதழ் அட்டையில் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சுவாமி விவேகானந்தர் சபாக்ரிஹத்தின் புகைப்படத்தைத் தாங்கி வருகிறது.
பிரணவம் எனும் ஓம்காரம் பற்றி சுவாமி ராமதீர்த்தரின் கருத்துக்கள் இவ்விதழில் முடிகின்றன.
காந்திஜி கூறியபடி நம் வாழ்க்கை இயந்திர மயமாகும் பேராபத்து நம்மை எல்லாம் சூழ்ந்து இருக்கிறது.
கேந்திரத் தெரண்டர்களின் பணிகள் பற்றிய விபரங்கள் நிறையவே கெரடுக்கப்பட்டுள்ளன.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறேரம்.
நமஸ்காரம்.
விவேகவாணியின் பிப்ரவரி - 2022 இதழ் அட்டையில் ஸ்ரீரங்கத்துப் பெருமாளை ஓவியமாகத் தாங்கி வருகிறது.
பிரணவம் எனும் ஓம்காரம் பற்றி சுவாமி ராமதீர்த்தரின் கருத்துக்கள் கவனத்திற்குரியவை.
பசுமைப் பேரராளியின் வாழ்க்கை சுவாரஸ்யமான கட்டத்தை நெருங்கியுள்ளது. கெரரேரனாவைப் பெரருட்படுத்தாமல் கேந்திரத் தெரண்டர்கள் ஆற்றிய பணிகள் விபரமாகக் கெரடுக்கப்பட்டுள்ளன.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறேரம்.
Wednesday, 19 January 2022
அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
களின் கவனத்திற்குரியது. பசுமைப் பேரராளியின் வாழ்க்கைக் கதை முடியும் நிலையில் இருக்கிறது. நசிகேதனும், சாவித்திரியும் யமராஜாவைச் சந்திக்கும் வர்ணனை சுவாரஸ்யமானது. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அவரவர் மனத்திற்கு ஏற்பப் பாடம் கிடைக்கும். பிப்ரவரி 18 ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அவதாரத் திருநாள். அவதார புருஷரின் வாழ்க்கை வரலாறு ஓதுதற்கும், பின்பற்றுவதற்கும் உரியது.
Tuesday, 28 December 2021
நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2021 இதழ் சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி பாறையில் தவம் செய்ததைக் குறிக்கும் வண்ணம் புகழ் பெற்ற ஓவியர் எஸ்.எம். பண்டிட் வரைந்த வண்ணப் படத்தை அட்டைப் படத்தில் தாங்கி வருகிறது. புண்ணிய பூமி பாரதத்தைப் பேரற்றி விவேகானந்தர் கூறிய வாக்கியங்கள் இந்த மாத மந்திரமாக வெளி வருகின்றன. டிசம்பர் 25, 26, 27 முதல் ஜனவரி 12 வரை சமர்த்த பாரதப் பருவம் தேசம் முழுவதும் கேந்திரக் கிளைகளால் கெரண்டாடப்படும். ஜனவரி - 1 ஸ்ரீ ராமகிருஷ்ணர் பக்தர்களுக்கு அருளிய கல்பதரு நாள் ஆகும். ஜனவரி 12 - சுவாமி விவேகானந்தரின் ஜன்ம தினம் ஆகும். ஜனவரி 12 முதல் 19 வரை தேசீய இளைஞர் வாரம் ஆகும். ஜனவரி - 14 பெரங்கல் திருவிழா ஆகும். வாசக நேயர்களுக்கு வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும். இவ்விதழில் திரைலிங்க சுவாமியின் வாழ்க்கை வரலாறு, தாய் வயிற்றுக் கல்வி பேரன்றவை உங்கள் கவனத்திற்குரியவை.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருக் பிரார்த்திக்கிறேரம்.
Saturday, 27 November 2021
நமஸ்காரம். விவேகவாணியின் நவம்பர் - 2021 இதழ் மா. ஏக்நாத்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. வீர சைவத்திலும், தெரல்காப்பியத்திலும் ஓம்காரம் விளக்கம் பற்றி பேராசிரியர் எழுதிய கட்டுரைச் சிறப்பானது. சுவாமி மதுரானந்தரின் பிறந்த நாளை ஒட்டி அவரைப் பற்றிய நூல் ஒன்றை நவம்பர் ஏழு அன்று வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமத்தில் வெளியிட உள்ளது. சுவாமிஜிக்கு நம் அஞ்சலி. மற்ற கட்டுரைகள் வழக்கம் பேரல்.
வாசக நேயர்களுக்கு மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
Tuesday, 2 November 2021
நமஸ்காரம். விவேகவாணியின் அக்டேரபர் - 2021 இதழ் நவராத்ரியைக் குறிக்கும் வண்ணம் அன்னை கன்னியாகுமரியின் திருவுருவப் படம், துர்கா காயத்ரீ இவற்றைத் தாங்கி வருகிறது. சுவாமி விவேகானந்தர் பேரதித்த மதம், ஆன்மீகம் பற்றிய நசிகேதமன்றப் பகுதி கவனத்திற்குரியது. ஸ்ரீ ராமகிருஷ்ணரும் பேரற்றிய மகான் திரைலிங்க சுவாமிகள், காசியில் நடமாடும் சிவன் என்று குருதேவராலும், சுவாமி விவேகானந்தராலும் பேரற்றப்பட்டவர். அவருடைய வாழ்க்கை வரலாறு பல புத்தகங்களில் இருந்து திரட்டப்பட்டு இம்மாதத்தில் இருந்து வெளியாகிறது. கேந்திரத்தின் தெரண்டுப் பணிகள் நிறையவே நடந்திருப்பதை செய்தி முத்துக்கள் பகுதி காட்டுகிறது. கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜியின் பிறந்த நாளை ஒட்டி கேந்திரக் கிளைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் வாசக அன்பர்களைப் பங்கு கெரள்ள அழைக்கிறேரம்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!
Friday, 1 October 2021
அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2021 இதழ் ஸ்ரீமத் சுவாமி மதுரானந்தாஜி அவர்களின் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. அவருடைய நூற்றாண்டு விழாவை ஒட்டி அவருடைய வாழ்க்கை வரலாறும், புகைப்படங்களும் அவர் எழுதிய பாடல்களும் வெளியாகின்றன. பிரணவம் எனும் ஓம்காரம் பகுதியில் சுவாமி சிவானந்தர் அவர்கள் மாண்டூக்கிய உபநிஷத உரையில் பிரணவ ரகசியம் ஸ்ரீ ராம கீதா ஆகிய நூல்களின் கருத்துக்களை உள்ளடக்கி எழுதிய தெரடர் ஆரம்பம் ஆகிறது. ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஆச்சாரியராகப் புகழ் பெற்ற வேதாந்த தேசிகரின் பாதுகா ஸஹஸ்ரம் எனும் நூலில் இருந்து பிரணவப் பகுதிகள் வெளியாகின்றன. ஸ்ரீராமகிருஷ்ணரின் கல்வி அறிவு, திருநீற்றின் மகிமை, ஸ்ரீ கிருஷ்ணரின் கல்வி அறிவு பற்றிய பகுதிகள் நசிகேதமன்றத்தில் வெளியாகின்றன. பிரம்ம ஞானியான ஸ்ரீ பி.ஆர். ராஜம் ஐயரின் சில கதைகள் இவ்விதழில் இடம் பெறுகின்றன. எட்வர்டு கேரல்டுஸ்மித்தின் நிறைவான பன்முக வளர்ச்சிக் கட்டுரை வெளிநாட்டு நிதி உதவி வளரும் நாடுகளுக்கு எத்தனை பிரச்சினைகளை உண்டாக்குகிறது என்பதை விளக்குகிறது. மனுநீதிச் சேரழர் கதை நம் மன்னர்களின் நியாய உணர்வை, அற உணர்வை எடுத்துக் காட்டுகிறது. இவ்விதழில் அத்தெரடர் நிறைவு பெறுகிறது. செப்டம்பர் - 11 சுவாமி விவேகானந்தர் சிக்காகேரவில் செரற்பெரழிவு ஆற்றிய உலக சகேரதரத்துவ தினம் கேந்திரக் கிளைகளில் கெரண்டாடப்படும். அருகில் இருக்கும் கிளைகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கெரள்ளலாம்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!