அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் - 2017 இதழ் விவேகானந்தபுரம் பாரத மாதா சதனத்தின் பாரத மாதாவின் திருவுருவச் சிலையின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. ஸ்ரீராம நவமியை முன்னிட்டு பாரத மாதாவை ஸ்ரீ ராமனைப் போன்ற அவதார புருஷர்களைப் பெற்றெடுத்தவளாகப் போற்றும் துதிப்பாடல் இம்மாத மந்திரமாக வெளிவருவது பொருத்தமே. வளர்ச்சி பற்றிய லட்சிய தொண்டரின் வாழ்க்கை நோக்கங்களை விளக்கும் கேள்வி பதில் பகுதி வாசகர்களின் கவனத்திற்குரியது. ஸ்ரீராமனும் சீதாதேவியும் ஹனுமானும் காட்டிய லட்சிய பாரதத்தைப் படைப்போமாக! வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!
Wednesday, 12 April 2017
Wednesday, 8 March 2017
March 2017-விவேக வாணி
அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு இருக்கும் 27 அடி உயரமுள்ள வீரஹனுமானின் திருவுருவச்சிலையின் புகைப்படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. அவரைப்போல் கடமை உணர்வும் பக்தியும் கொண்டு தேசப்பணிக்கு உரிய ராமநவமி திருவிழா நமக்கு உற்சாகமூட்டுமாக! இவ்விதழில் பிரதம மந்திரியின் ராமாயண தரிசன துவக்க உரையில் சத்குரு மாதா அமிர்தானந்தமயீ தேவி ராமாயண தரிசன வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா பற்றிய வர்ணனையும் தகுந்த புகைப்படங்களுடன் இடம் பெறுகின்றன. இடவசதி இன்மையால் மற்ற அம்சங்கள் குறைத்து வெளியிடப்படுகின்றன. ராமநவமி திருவிழா தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. நமஸ்தே மஹாராஷ்டிரா இவ்விதழில் நிறைவடைகிறது. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!
Tuesday, 7 February 2017
February 2017-விவேக வாணி
அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம்.
விவேகவாணியின் பிப்ரவரி – 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் பேரற்புதமாக அமைந்து இருக்கும் ஸ்ரீ ராமாயண தரிசனம் வளாகத்தின் திருவுருவப் படத்தைத் தாங்கி வருகிறது. திறப்பு விழா விபரங்கள் இவ்விதழின் உள்ளே தரப்பட்டுள்ளன. இவ்விதழில் பாரத நாட்டு விஞ்ஞானம் இயற்கை முறை பற்றிய சிறப்புக் கட்டுரை விசிஷ்டாத்வைதத்தில் பிரணவம் ஆகிய சிறப்புப் பகுதிகள் வருகின்றன. அடுத்த இதழில் மேதகு பிரதம மந்திரியின் சிறப்புரையின் தமிழ் வழவமும் வெளிவரும்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்.
Subscribe Online or Get Online eMagazine
Friday, 13 January 2017
January 2017-விவேக வாணி
Monday, 19 December 2016
December 2016-விவேக வாணி
விவேகவாணியின் டிசம்பர் - 2016 இதழ் சமர்த்த பாரதப் பருவம் கீதை பிறந்த நாள் இவற்றைக் குறிக்கும் வண்ணம் பாரத மாதா கீதை காட்சி சுவாமி விவேகானந்தர் ஆகிய படங்களை அட்டையில் தாங்கி வருகிறது. உபநிஷதங்களைப் பற்றி விசிஷ்டாத்வைதம் கூறும் கருத்துக்கள் கிடைப்பதற்கு அரியவையே. அவை நமக்குக் கிடைத்தது நம்முடைய பாக்கியமே. சமர்த்த பாரதப் பருவத்தை ஒட்டி கேந்திரக் கிளைகள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. அப்பருவத்திலும் கீதைத் திருநாளிலும் கேந்திர நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம். மார்கழித் திங்கள் ஆண்டாளின் திருப்பாவையையும் மணிவாசகரின் திருவெம்பாவையையும் ஓதுவதற்குரிய புனித மாதம் ஆகும். பக்தர்கள் இப்போதே தயாராகி விடவேண்டும். கல்பதரு புனித நாள் பொங்கல் ஆகிய நன்னாட்களுக்கு வாழ்த்துக்களை இப்போதே தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!
Saturday, 12 November 2016
November 2016-விவேக வாணி
விவேகவாணியின் நவம்பர் - 2016 இதழ் கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜி ரானடேயின் பிறந்த நாளை ஒட்டி நவம்பர் 19 அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறது. அட்டைப்படமாக நல்லகுடும்பம் என்பதை சித்தரிக்கும் அஞ்சல் தலைகளை தொகுத்து வெளியிடுகிறோம். இம்மாத மந்திரமும் உலக குழந்தைகள் தினம் குடும்ப உறவு இவற்றைக் குறிக்கும் வண்ணம் வெளியாகிறது. பிரணவம் எனும் ஓம்காரம் தொடரில் துவைத மரபில் பிரணவம் எனும் தொடர் இவ்விதழில் நிறைவு பெறுகிறது. விசிஷ்டாத்வைதத்தில் பிரணவம் என்ற தொடர் அரிய விஷயங்களை உள்ளடக்கியதாக அடுத்த இதழில் இருந்து தொடங்கும். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் பற்றிய கட்டுரை பாரத தொழில் வியாபார மரபில் குடும்பங்கள் ஆற்றும் நற்பணியை விவரிக்கின்றது. வாசகர்கள் அருகில் உள்ள கேந்திர மையத்தில் கேந்திர நிறுவனரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள அழைக்கின்றோம். உங்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!
Friday, 14 October 2016
October 2016-விவேக வாணி
உங்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!
Subscribe to:
Posts (Atom)






