Monday, 19 December 2016

December 2016-விவேக வாணி

விவேகவாணியின் டிசம்பர் - 2016 இதழ் சமர்த்த பாரதப் பருவம் கீதை பிறந்த நாள் இவற்றைக் குறிக்கும் வண்ணம் பாரத மாதா கீதை காட்சி சுவாமி விவேகானந்தர் ஆகிய படங்களை அட்டையில் தாங்கி வருகிறது. உபநிஷதங்களைப் பற்றி விசிஷ்டாத்வைதம் கூறும் கருத்துக்கள் கிடைப்பதற்கு அரியவையே. அவை நமக்குக் கிடைத்தது நம்முடைய பாக்கியமே. சமர்த்த பாரதப் பருவத்தை ஒட்டி கேந்திரக் கிளைகள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. அப்பருவத்திலும் கீதைத் திருநாளிலும் கேந்திர நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம். மார்கழித் திங்கள் ஆண்டாளின் திருப்பாவையையும் மணிவாசகரின் திருவெம்பாவையையும் ஓதுவதற்குரிய புனித மாதம் ஆகும். பக்தர்கள் இப்போதே தயாராகி விடவேண்டும். கல்பதரு புனித நாள் பொங்கல் ஆகிய நன்னாட்களுக்கு வாழ்த்துக்களை இப்போதே தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!

                                 Subscribe Online     or      Get Online eMagazine

Saturday, 12 November 2016

November 2016-விவேக வாணி

விவேகவாணியின் நவம்பர் - 2016 இதழ் கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜி ரானடேயின் பிறந்த நாளை ஒட்டி நவம்பர் 19 அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறது. அட்டைப்படமாக நல்லகுடும்பம் என்பதை சித்தரிக்கும் அஞ்சல் தலைகளை தொகுத்து வெளியிடுகிறோம். இம்மாத மந்திரமும் உலக குழந்தைகள் தினம் குடும்ப உறவு இவற்றைக் குறிக்கும் வண்ணம் வெளியாகிறது. பிரணவம் எனும் ஓம்காரம் தொடரில் துவைத மரபில் பிரணவம் எனும் தொடர் இவ்விதழில் நிறைவு பெறுகிறது. விசிஷ்டாத்வைதத்தில் பிரணவம் என்ற தொடர் அரிய விஷயங்களை உள்ளடக்கியதாக அடுத்த இதழில் இருந்து தொடங்கும். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் பற்றிய கட்டுரை பாரத தொழில் வியாபார மரபில் குடும்பங்கள் ஆற்றும் நற்பணியை விவரிக்கின்றது.  வாசகர்கள் அருகில் உள்ள கேந்திர மையத்தில் கேந்திர நிறுவனரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.   உங்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!



                                 Subscribe Online     or      Get Online eMagazine

Friday, 14 October 2016

October 2016-விவேக வாணி

 விவேகவாணியின் அக்டோபர்  - 2016 இதழ் தூத்துக்குடியில் கேந்திர அன்பர்கள் பெரு முயற்சியுடன் நிறுவிய விவேகானந்த சதுக்கம் விவேகானந்தர் திருவுருவச் சிலை ஆகியவற்றின் புகைப்படத்தைத் தாங்கி வருகிறது. தீபாவளி மாதத்தில் அன்பர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!





    Subscribe Online     or      Get Online eMagazine

Saturday, 10 September 2016

September 2016-விவேக வாணி



விவேகவாணியின் செப்டம்பர் - 2016 இதழ் சுவாமி விவேகானந்தரின் சிக்காகோ சொற்பொழிவைக் குறிக்கும் வண்ணம் உலகளாவிய பாரதப் பண்பாடு பற்றிய சித்திரத்தை அட்டையில் தாங்கி வருகிறது. சுவாமிஜி காட்டியபடி பாரதப் பண்பாடு உலகம் முழுவதும் பரப்பப்படுவதை இவ்விதழின் சிறப்புக் கட்டுரைகள் வெளிக் காட்டுகின்றன.
இதற்கென இவ்விதழ் 80 பக்கங்களுடன் சிறப்பிதழாக வெளி வருகிறது. பரவி வரும் பாரதப் பண்பாடு உலகிற்கு நன்மை புரிய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்போம். 
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!



                          Subscribe Online     or      Get Online eMagazine

Wednesday, 10 August 2016

August 2016-விவேக வாணி

விவேகவாணியின் ஆகஸ்ட் - 2016 இதழ் சுதந்திர தினத்தைக் குறிக்கும் வண்ணம் நம் தேசீயக் கொடியை மலராகச் சித்தரிக்கிறது. விவேகவாணியில் தொடராக வரும் மலர் மருத்துவக் கட்டுரை வாசகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. அவ்விஷயத்திலும் அட்டைப்பபடம் மலர்களைத் தாங்கி வெளி வருவது பொருத்தமே. இப்புனித நாளை ஒட்டி பங்கிம் சந்திரரின் புகழ்பெற்ற தேசீய பாடலாகிய வந்தே மாதரமும் அதற்கு பாரதியார் செய்த அற்புதமான தமிழாக்கமும் வெளியாகி உள்ளன. ஸ்ரீ அரவிந்தரின் புனித நாளைக் குறிக்கும் வண்ணம் அவர் ஓம்காரம் பற்றிக் கூறிய கருத்துக்கள் இவ்விதழில் பிரசுரமாகத் தொடங்குவது பொருத்தமே. ஆகஸ்ட் 15, மற்றும் 16 ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதி அடைந்த நாள் ஆகும். குரு மஹாராஜை வணங்கி நலன்கள் பெறுவோம். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!




                          Subscribe Online     or      Get Online eMagazine

July 2016-விவேக வாணி

விவேகவாணியின் ஜூலை - 2016 இதழ் விவேகானந்த கேந்திர ஆண்டறிக்கையாக தமிழில் வெளி வருகிறது. இதன் பிரதிகள் சுமார் இரண்டரை லட்சம் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மராட்டியிலும் தமிழிலும் அச்சிடப்பட்டு கேந்திரப் புரவலர்களைச் சென்றடையும். கேந்திரப் புரவலர்களாக இவ்விதழைப் பெறும் தமிழ் வாசகர்கள் விவேகவாணி சந்தாதாரர்களாக இல்லாவிட்டால் இப்பத்திரிகைக்குச் சந்தா அனுப்பி கேந்திரக் குடும்பத்தில் இணையும்படி அன்புடன் அழைக்கின்றோம். மாதம் ஒரு மந்திரமாக ஓம்கார விளக்கமும் வெளியாகின்றது. ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டை ஒட்டி நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கும் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கைக்கும் உள்ள உறவை எடுத்து விளக்கும் கட்டுரை இவ்விதழிலும் தொடர்கிறது. அடுத்த இதழில் விவேகவாணியின் வழக்கமான அம்சங்கள் வெளி வரும். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!



                          Subscribe Online     or      Get Online eMagazine

June 2016-விவேக வாணி

விவேகவாணியின் ஜூன் - 2016 இதழில் பிரணவம் எனும் ஓம்காரம் தொடரின் 300-வது பகுதியைக் குறிக்கும் வண்ணம் சிறப்பிதழாக வெளி வருகிறது. அட்டைப் படத்தில் பல்வேறு மொழிகளில், எழுத்துக்களில் ஓம்காரத்தின் சித்திரத்தை வெளியிட்டுள்ளோம். மாதம் ஒரு மந்திரமாக ஓம்காரத்தின் பெருமை கடோபநிஷதத்தில் இருந்து எடுத்தாளப்பட்டு வெளியாகிறது. ஸ்ரீ ராமானுஜரின் 1000-மாவது பிறந்த நாளைப் போற்றும் வண்ணம் ஆழ்வார்களின் கருத்துக்களுக்கும் உள்ள ஒப்புமை பற்றிய தொடர் இவ்விதழில் தொடங்குகிறது. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்! 



                          Subscribe Online     or      Get Online eMagazine

Friday, 6 May 2016

May 2016-விவேக வாணி

விவேகவாணியின் மே - 2016 இதழ் ஆச்சாரிய ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாள் ஆண்டு விழாவின் துவக்கத்தைக் குறிப்பிடும் வண்ணம் அவருடைய திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வெளி வருகிறது. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம!;











                          Subscribe Online     or      Get Online eMagazine


Friday, 15 April 2016

April 2016-விவேக வாணி

விவேகவாணியின் ஏப்ரல் - 2016 ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு ஸ்ரீ ராமரின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. இவ்விதழில் மலர்களைப் பற்றிய மருத்துவக் கட்டுரை வாசகர்களின் சிறப்பு கவனத்திற்கு உரியது. திருக்கோவில்களும் ஓம்காரமும் பற்றிய குறிப்புக்கள் பயனுள்ளவை. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!;






  Subscribe Online     or      Get Online eMagazine

Thursday, 10 March 2016

March 2016-விவேக வாணி

விவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த ஹோலிப் பண்டிகை, மற்றும் பல புனித நாட்களைக் குறிப்பிடு;கிறது (அட்டைப்படம்). சூத ஸம்ஹிதையின் தமிழாக்கம் அரியதொரு ஆவணம் ஆகும். அது ஓம் பற்றிக் கூறும் பகுதி வாசகர்கள் கவனத்திற்கு உரியது. வாசகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! கட்டுரைகளின் மற்ற அம்சங்கள் இடவசதிக்கேற்ப வெளியாகின்றன. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம் !   

   Subscribe Online     or      Get Online eMagazine

Thursday, 11 February 2016

February 2016-விவேக வாணி




விவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கிரகத்தின் உடுக்கை ஒலி பற்றிய வருணனை இவற்றைத் தாங்கி வருகிறது. ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதார தினத்தை ஒட்டி அவரைப் போற்றும் அம்சங்கள் வெளியாகின்றன. கட்டுரைகளின் மற்ற அம்சங்கள் இடவசதிக்கேற்ப வெளியாகின்றன. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம் !




                                Subscribe Online     or      Get Online eMagazine

Friday, 8 January 2016

January 2016-விவேக வாணி

   விவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி , தை அமாவாசை ஆகிய புனித தினங்களை நினைவூட்டுகிறது. வாசக நேயர்களுக்குப் பொங்கல் வாழ்த்துக்களையும், குடியரசு தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். கட்டுரைகளின் மற்ற அம்சங்கள் இடவசதிக்கேற்ப வெளியாகின்றன. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம் !