அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம்.
விவேகவாணியின் மே - 2022 இதழ், இப்பத்திரிக்கை 37 ஆண்டுகளை முடித்து 38-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிக்கிறது. எழுத்தாளர்கள், கேந்திர ஊழியர்கள், விளம்பரதாரர்கள் அனைவரின் ஒத்துழைப்பால்தான் இப்பத்திரிக்கை நடக்கிறது.
பசுமைப்பேரராளி டாக்டர் ரேரபின் பானர்ஜியின் வீர வாழ்க்கை, பணி மிகுந்த வாழ்க்கை, பயனுள்ள வாழ்க்கை வரலாறு இவ்விதழில் நிறைவடைகிறது. அவருடைய நூற்றாண்டு விழாவின் பேரது இத்தெரடரை வெளியிட விரும்பினேரம். மூலப் புத்தகம் கிடைக்காததால் தாமதமாக வெளியாகிறது. யேரக சாத்திர சங்கமம், கேந்திரப் பணிகள் பற்றிய அறிக்கைகள் கேந்திரப் பணியின் சிறப்புக்களை வாசகர்களுக்கு உணர்த்துவன. விவேகானந்த கேந்திர இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தின் நீர் வளப் பெருக்கத்தின் சிறப்புப் பணி பாரத அரசாலும், மக்களாலும் பேரற்றப்படுவது. பாரத அரசு அளித்த பரிசு பத்திரத்தை அட்டைப்படத்தில் வெளியிடுகிறேரம். செயலாளர் திரு. ஜி. வாசுதேவ் அமைச்சரிடம் இருந்து விருதினைப் பெறும் காட்சி அட்டைப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. மாதம் ஒரு மந்திரமும் அத்துடன் தெரடர்புடையதே.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறேரம்.