Thursday 17 October 2019

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். கன்னியாகுமரி விவேகானந்தப்  பாறை நினைவுச் சின்னம், தன் 50-ஆம் ஆண்டில் தேசீய, தெய்வீக, தார்மீக சேவைப்பணியில் பீடு நடை பேரடுகிறது. இவ்வாண்டை அகில இந்திய மக்கள் தெரடர்பு ஆண்டாக நடைமுறைப்படுத்த கேந்திரம் தீர்மானித்திருக்கிறது.
அதன்படி 2019 செப்டம்பர் முதல் வாரத்தில் கேந்திரத் தலைவர்கள், பாரதக் குடியரசுத் தலைவர் மேதகு ராம்நாத் கேரவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் மேதகு வெங்கையா நாயுடு, பாரதப் பிரதமர் மேதகு நரேந்திரமேரதி ஆகியேரரைச் சந்தித்து, பாரத நாட்டின் பெரது வாழ்வில் கன்னியாகுமரி பாறை நினைவுச் சின்னத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, கேந்திரப் பணிகளையும் விளக்கிக் கூறினார்கள். தேசத் தலைவர்களின் நல்வாழ்த்துக்களையும், அறிவுரைகளையும் பெற்றார்கள்.
இம்மாத விவேகவாணியின் அட்டையில் தேசத் தலைவர்களைக் கேந்திர அதிகாரிகள் சந்திக்கும் காட்சிகள் இடம் பெறுகின்றன.
இவ்விதழ் பாறை நினைவுச் சின்ன 50-ம் ஆண்டு சிறப்பிதழாகக் கட்டுரைகளைத் தாங்கி, அதிகப் பக்கங்களுடன் வெளிவருகிறது.
காஞ்ஜன் காடு பாப்பா ராம்தாஸின் நீதிக் கதைகள் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தவை. அவை இவ்விதழில் நிறைவு பெறுகின்றன.
பிற கட்டுரைகள், அம்சங்கள் வழக்கம்பேரல்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

No comments:

Post a Comment