அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2020 இதழ் சர்வஜ்ஞரான வேதாந்த தேசிகரின் நினைவைப் பேரற்றும் வண்ணம் அவருடைய திருவுருவப் படத்தையும், அவர் எழுதிய திருச்சின்ன மாலை தமிழ்ப் பாடலை இம்மாத மந்திரமாகவும் தாங்கி வருகிறது. காலம் சென்ற பேராசிரியர் என். சுப்பிரமணிய பிள்ளை அவருடைய துணைவியார், பேராசிரியர் நாகம் சுப்பிரமணியம் ஆகியேரருக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியும் வெளி வருகிறது. இவ்விதழும் டிஜிட்டல் வடிவத்தில் கேந்திர இணைய தளத்தில் வெளியாகிறது.
கணினி யுகத்தில் செயற்கை மூளை பற்றிய அறிவு ஆராய்ச்சியில் பாரத நாட்டின் ரஸம் என்ற கெரள்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதனை மாண்டூக்கிய உபநிஷதத்துடன் இணைக்கும் அற்புதப் பகுதியை எழுதும் திறமை சுவாமி நித்ய சைத்தன்ய யதி ஒருவருக்கே உண்டு. சிறுசிறு இலக்கிய குறிப்புக்களில் பிரணவம் பற்றிய வருணனையும் வெளியாகின்றது. நவராத்திரி, தீபாவளி விழாக்களுக்கு முன்கூட்டியே வாசகர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கெரள்கிறேரம்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!