Friday, 9 June 2017

June 2017-விவேக வாணி


அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூன் - 2017 இதழ் விவேகானந்தபுரம் பாரத மாதா சதனத்தின் நடராஜ பெருமானின் திருவுருவச் சிலையின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. சீக்கிய சம்பிரதாயத்தில் பிரணவம் பற்றியக் கருத்துக்களை பாரத நாட்டில் பல மொழிகளிலும் நாம் பரப்ப வேண்டும். அதன் முதல் கட்டமாக குருகிரந்த சாகெப்பின் மையக் கருத்தாகிய ஜப்புஜி என்ற நூலின் தமிழாக்கம் தமிழில் வெளிவருகிறது. மற்ற அம்சங்கள் இடவசதிக்கேற்ப வெளி வருகின்றன.  ஜூலை – 4 சுவாமி விவேகானந்தரின் சமாதி தினத்தை ஒட்டி கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் அன்னபூஜை  நடக்க இருக்கிறது. அன்பர்கள் பங்குகொள்ள அழைக்கிறோம். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்!







                        Subscribe Online     or      Get Online eMagazine

Friday, 2 June 2017

May 2017-விவேக வாணி

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மே - 2017 இதழ் அட்டைப்படத்தில் திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமியின் திருவுருவச்சிலையின் படத்தைத் தாங்கி வருகிறது. இந்த அழகான காட்சி கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பாரத மாதா சதனத்தில் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீ ராமானுஜரின் 1000-மாவது பிறந்த நாள் விழாவைப் பேரற்றும் வண்ணம் அவருடைய கெரள்கையின்படி உபநிஷதங்களுக்கு எழுதப்பட்ட உரையும், ஆழ்வார்கள் பாடல்களுக்கு அவர் கண்ட விளக்கமும் கெரடுக்கப்படுகின்றன. விசிஷ்டாத்வைத மரபில் உபநிஷதங்களின் உரை கிடைத்தற்கரிய பெரக்கிஷம் ஆகும். அதனால் ஸ்ரீ ஸ்ரீரங்கராமானுஜரின் உரையில் இருந்து பல சம்ஸ்கிருதத் தெரடர்களையும், பிரணவம் எனும் ஓம்காரம் தெரடரில் சேர்த்து இருக்கிறேரம். புறச்சூழல் சீரழிவைக் கண்டு வருந்தி ஸ்ரீமதி கமலா செளத்ரி எழுதிய கட்டுரையும் வாசகர்களின் கவனத்திற்குரியது. ஸ்ரீ ரமண மஹரிஷி கூறிய வேதாந்தக் கதைகள் இவ்விதழில் இடம் பெற்றிருக்கின்றன. 








                        Subscribe Online     or      Get Online eMagazine