Friday 22 March 2019

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்களைத் தாங்கி வருகிறது. கங்கா நதியைப் பேரற்றும் துதி இந்த மாத மந்திரமாக உள்பக்கம் ஒன்றில் வெளியாகிறது. உலகின் மிகப்பெரிய மக்கள் கூடும் புனிதக் கூட்டமாகும் கும்பமேளா. அதைப் பற்றிய உலகளாவிய ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன. 
மநு தர்மம் பற்றி கேந்திர அன்பர் எழுதிய நூலின் விமர்சனம் ஒரு முழுக்கட்டுரையாகவே வெளி வருகிறது. மநுவைப் பேரற்றி உலக அறிஞர்கள் கூறிய கருத்துக்களும் இந்த மதிப்புரையில் இடம் பெற்றுள்ளன.
பசுமைப் பேரராளி டாக்டர் ரேரபின் பானர்ஜி தன் பணிக்களத்தில் புகுந்த வரலாறு சுவை மிக்கது. ஆயுர்வேதம், சித்த வைத்தியம் ஆகியவற்றின் தர்க்கம் உலகம் முழுவதும் தெரிகிறது. அதுபற்றிய கட்டுரைகளும் வாசகர்கள் கவனத்திற்குரியவை.
மகாத்மாகாந்தியின் 150-வது பிறந்தநாள் ஆண்டு விழாவின் காலக்கட்டத்தில் விவேகானந்த கேந்திரத்திற்கு கிராம முன்னேற்றம், கல்வி, இயற்கை வளம் ஆகிய துறைகளில் நற்பணி ஆற்றியதற்காக உலகளாவிய பரிசும், விருதும் கிடைத்துள்ளன. மதமாற்றத்தின் தீமைகளைப் பற்றி காந்திஜி கூறிய கருத்துக்கள், கேந்திர முன்னாள் தலைவர் பேராசிரியர் கே.என். வாஸ்வானி அவர்களால் தெரகுக்கப்பட்டு வெளியாகின்றன. 
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!